கோவை சைபர் கிரைம் போலீசார் செய்தியாளகளிடம் கூறியதாவது:- சமூக வலைதளத்தில் விலை மதிப்புள்ள செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்வதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன .இதில் மோசடி ஆசாமிகள் சம்பந்தம் இல்லாதநபரின் ஆதார் அட்டைகளை அடையாளமாக காண்பித்து தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறுகின்றனர் .அதை நம்பி பணம் செலுத்தினால் பொருட்கள் கொடுக்காமல் பணத்தை ஏமாற்றி விடுகிறார்கள். இது போன்ற மோசடியில் தொடர்புடைய 2 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கோவைசைபர் கிரைம் தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் பெங்களூருக்கு சென்று அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள்நாகப்பட்டினம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 30) கோவை பி.என். புதூரை சேர்ந்த ஆதர்ஷ் ( வயது 22) என்பதும் அவர்களின் சமூகவலைதளத்தில் ஆன்லைன் மூலம் மதிப்புமிக்க பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக பணம் வசூலித்துமோசடி செய்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் .இதில் கைதான ரமேஷ் கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவார். ஆதர்ஷ் பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். ரமேஷ் தமிழ்நாடு முழுவதும் பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக 8 வழக்குகள் உள்ளன அவரிடம் பணத்தைஇழந்தவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் .இதை யடுத்து ரமேஷ், ஆதர்ஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 2 பேரிடம் பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்யலாம் என்றுசைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
ஆன்லைன் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் விற்பதாக கூறி லட்ச கணக்கில் பணம் மோசடி, என்ஜினியர் உட்பட 2பேர் கைது. ..
