கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது .இங்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 3 நாட்களாக வேலை செய்து வந்தார் .இந்த நிலையில் நேற்று தனது மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டதால் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் …அப்போது அங்கு வந்த பாபு விஜயலட்சுமி
யிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நகை-பணமஇருந்தால் கொடுத்து விடு. இல்லாவிடில்கொலை செய்து விடு வேன் என்று மிரட்டினார்..அதற்கு அவர் தன்னிடம் நகை பணம் எதுவும்இல்லை என்று கூறினார் இதனால் ஆத்திரமடைந்த அவர் விஜயலட்சுமியின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி, கை- கால்களை கயிற்றால் கட்டி போட்டார் ..பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10, ஆயிரம் . பணம் ஆகியவற்றை,கொள்ளை அடித்தார் அதன் பிறகு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாள் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து மகன்கள் 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு வெளிப்பக்கமாக
தாழ்யிடப்பட்டிருந்தது. உடனே அவர்கள் கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாயார கயிற்றால் கட்டப்பட்டு தரையில் கிடந்தார். பின்னர் அவர்கள் விஜயலட்சுமியின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கொள்ளையனே பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவு பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிடதொழிலாளியை தேடி வருகிறார்கள். சூலூரில் பட்ட பகுதியில் பெண்ணை கட்டி போட்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.