கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன், ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ மாடசாமி ஆகிய கோவில்களின் பொங்கல் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாட்டுடன் மதியம் அன்னதானமும் அன்று மாலையில் பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, பூவோடு எடுத்து மேளதாளம் முழங்க பக்தி பரவசத்தோடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ அருள்சக்தி மாரியம்மன் ஆலயம் சென்றடைந்ததைத் தொடர்ந்து இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது இவ்விழாவின் இறுதிநாளான நேற்று அக்காமலை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் மழலைகள் மைதானத்தில் நடைபெற்றது அதன் பின்னர் நடைபெற்ற கோவை பாய்ஸின் கலைநிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவடைந்தது இப்பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் செய்திருந்த இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்