கோவை பீளமேட்டில் உள்ள நாராயணசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ( வயது 28) இவர் தண்ணீர் பந்தல் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மேற் கூரைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த ரூ 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பீளமேடு போலீசில் சவுந்த ர்ராஜன் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கோவை துணிக்கடை அதிபர் வீட்டில் பணம் திருட்டு…
