முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைக்கு தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி ஏதும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் வழக்கை ஏற்றதாக ஆகி விடும். நீதிமன்றம் தலையிட்டால் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக மாற வாய்ப்புள்ளது என்று நீதிபதி கருத்து கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சிவில் சூட் வழக்கை விரைந்து கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது..