கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் ..ஆவாரம்பாளையத்தில் உள்ள கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார் .அப்போது மாணிக்கம் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பொன் ராணிவீட்டில் வந்து பார்த்தபோது மாணிக்கம் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவிக்கு செல்போனில் பேசிவிட்டு கணவர் தூக்கு போட்டு தற்கொலை …
