கோவை விளாங்குறிச்சிஅம்பேத்கார் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு ஒரு கும்பல் அறை எடுத்து தங்கியது. அவர்கள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த லாட்ஜில் வரவேற்பாளர் விஷ்ணு பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பப இடத்துக்கு விரைந்து சென்று தங்கியிருந்த கோவில் பாளையம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்த யோகேஷ் ( வயது 22) சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த அப்துல் சம்பத் ( வயது 20 )எஸ்.எஸ். குளம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த இம்மானுவேல் ( வயது 21) ஒண்டிப்புதூர் சேர்ந்த ஆகாஷ் (வயது 20) சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த நவீன் சக்தி (வயது 20) நேரு நகர் ரேகா ஜெனிபர் ( வயது 18)
ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு ‘ ரூம் ” புக்கிங் செய்து கொடுத்த லோகேஸ்வரி என்ற அபி தலைமறைவாகி விட்டார். இவர்கள் கோவையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. தப்பிய லோகேஸ்வரி என்ற
அபியை போலீசார் தேடி வருகிறார்கள்..