கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மணியக்காரன் பாளையம், மகாலட்சுமி நகரில் வீடு வாடகை எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பதாக பெரியநாயக்கன்பாளையம்போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில்அழகிகளை வைத்து விபச்சாரம்நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதை நடத்தி வந்த பெண் தரகர்களான மேட்டுப்பாளையம் கரட்டு மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் ( வயது 35) ஒடிசாவைச் சேர்ந்த குர்தேஸ்வர் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 4அழகிகள் மீட்கப்பட்டுகாப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர.