அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளை அழைத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அழைத்து நிறைய வழக்குகளை போட்டு உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே தனம் மாளிற்கு ரகசிய மொபைல் போன் வந்தது. அதில் பேசிய கல்லூரி மாணவி எனது பெயர் வேண்டாம் அம்பத்தூர் கருக்கு மேம்பாலம் இந்திரா நகர் அருகே ஒருவன் கஞ்சா வியாபாரி போல் தெரிகிறது .அவனை பிடித்து விடுங்கள் என கூறிவிட்டு போனை வைத்து விட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனம்மாளும் போலீஸ் படையினரை அழைத்துக் கொண்டு கல்லூரி பேராசிரியை தோற்றத்தில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு இரவு 8:30 மணி அளவில் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒருவன் மாறுவேடத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் இடம் பேச்சு கொடுத்தான் அவரும் ஏம்பா தம்பி நான் கல்லூரி பேராசிரியை என்கிட்ட படிக்கிற பசங்க கஞ்சாவை ரொம்ப விரும்புவாங்க ரேட் கொஞ்சம் குறைச்சுக்கப்பா என்று பேரம் பேசினார். அவனும் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி தருகிறேன் என சொல்லி பேரம் பேசிக் கொண்டிருந்தபோதே இன்ஸ்பெக்டர் தனம்மாள் தான் வைத்திருந்த மொபைல் போனில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டினிலே என்ற பாட்டை போட மறைந்திருந்த போலீஸ் படையினர் கஞ்சா வியாபாரி பிடித்தனர் . அவனிடத்தில் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை கொல்கத்தாவில் இருந்து அதிக லாபம் வைத்து விற்கவும் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு விற்க வந்தபோது என்னை பிடிச்சீங்க என கதறி கதறி அழுதான்.
அவனது பெயர் விபரம் வருமாறு ஜெயசூர்யா வயது 24 தகப்பனார் பெயர் அன்பழகன் முதல் தளம் பிரிட்டானியா முதல் தெரு கொளத்தூர் சென்னை ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இவன் சொல்லிய மற்றொரு குற்றவாளியை வி. பி அசோக் லால் வயது 25. தகப்பனார் பெயர் பாபு 43, 2 வது பிளாக் 3 வது அவன்யூ ராயல் என் கிளேவ் அபார்ட்மெண்ட் அண்ணா நகர் சென்னை என்பவனை என் பிளாக் எம் எம் டி ஏ காலனி அரும்பாக்கம் சென்னை என்பவனை வீட்டின் முன்பாக வைத்து கைது செய்யப்பட்டான். அவன் வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரையும் அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..