சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா வயது 35. இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது நிறுவனத்தில் ரூ 2000 செலுத்தினால் 4 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. உண்மை என்று நம்பி ரூ 2000 செலுத்தினார். சில நாட்களில் அவரது கணக்கில் ரூ 4 ஆயிரம் கிரெடிட் ஆகி இருந்தது . இதை உண்மை என்று நம்பிய அவர் ஏழு முறை பல ஆயிரம் ரூபாய் செலுத்தி பணத்தை இரட்டிப்பாக பெற்றுள்ளார் .இதனால் அந்த நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை பெற்றதால் அவர் 14 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார் . இந்த நிலையில் அவர்கள் கூறியபடி இரட்டிப்பான தொகை வந்து சேரவில்லை அவரும் மனம் தளராமல் அந்த கம்பெனியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பாமினி விசித்ரா பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் அழுது கொண்டே புகார் அளித்தார். போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரித்து வருகின்றனர்..