இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு – கோவையில் துணிகரம்.!!

கோவை சவுரிபாளையம் வ. உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர் நேற்று இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புலிய குளம், கிட்னி சென்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை பறித்தான். இதில் 4 பவுன் கொள்ளையன் கையில் சிக்கியது. அரை பவுன் மட்டும் கீழே விழுந்து விட்டது. இதுகுறித்து லட்சுமி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

இதேபோல கோவை ராமநாதபுரம், சுங்கம் மதுரை வீரன் திட்டுப்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பத்மாவதி (வயது 30) இவர் நேற்று இரவு ஸ்கூட்டியில் தனது அண்ணன் மனைவியுடன் லட்சுமி மில் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டான். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் பத்மாவதி புகார் செய்தார். இன்பெக்ட்டர் கிருஷ்ண லீலா வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்..