தமிழக ரயில்வே காவல்துறையின் கூடுதல் இயக்குனர் வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர் சுப்பிரமணி முதல் நிலை காவலர் ஆர் சக்திவேல் காவலர் எஸ் ஏழுமலை ஆகியோர் தான் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை காட்பாடியில் இருந்து சேலம் ஜங்ஷனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திருப்பத்தூருக்கும் சாமல்பட்டிக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது ரயிலின் கடைசி பெட்டியான முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சுமைகள் வைக்கும் ( ரேக்யில் ) பளுதாங்கியில் கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற சோல்டர் பேக்கில் சோதனை செய்தனர். அதில் நான்கு பண்டல்கள் இருந்தன. தலா 1 கிலோ வீதம் மொத்தம் 4 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர் .அதை கைப்பற்றினர். அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளின் செல்போன்கள் மற்றும் அவர்களது பயண சீட்டுகளை பரிசோதித்தனர். அந்த கஞ்சாவை யார் கொண்டு வந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் சேலம் ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்..