கோவை துடியலூர் ஜி.என்.மில் பக்கம் உள்ள டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 56) இவர் நேற்று தனியார் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார் .அங்கு பஸ்ஸை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். இதுகுறித்து கண்ணம்மாள் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.