கோவை அருகே உள்ள இருகூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்..இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இருகூரில் வீட்டு முன் நிறுத்தி இருந்த திடீரென எரிந்து கார் நாசம்..!
