கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என் பி.எஸ்.சி ) உறுப்பினராக முனைவர் பிரேம் குமாரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 6 ஆண்டுகள் இந்தப் பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் முனைவர் இரா.பிரேம்குமார், கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.என்.டி. குளோபல் கல்விக் கழகம் ஆகியவற்றின் முதல்வராகப் பணியாற்றியவர் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் முனைவர் இரா.பிரேம்குமார், எழுத்தாளர், நிதிக்கட்டுப்பாட்டு இயல் நிபுணர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிதிக்கட்டுப்பாட்டு ஆய்வுத் துறையில் முதன் முதலாக. முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
கல்லூரிப் பேராசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். மாணவர் நலனில் பெரிதும் நாட்டம் கொண்டு செயலாற்றியவர். வணிகம் மற்றும் நிதியியல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு பெரிதும் ஊக்கம் கொடுத்தவர். தனிநபர், நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வணிகம், நிதி மேலாண்மை சார்ந்து ஆலோசனைகளை வழங்கி வருபவர்.இவருக்கு கல்லூரி முதல்வர்களும், முனைவர்களும், மாணவர்களும்,பல்வேறு சமூக சேவை அமைப்பைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக முனைவர் இரா.பிரேம்குமார் பொறுப்பேற்பு.!!
