ஆவடி: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கர் காவல்துறையே திணறும் அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பெயரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன . இதன் அடிப்படையில் 199 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 222 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . 438 கிலோ கஞ்சாவும் 3815 எண்ணிக்கிலான போதை மாத்திரைகளும் போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ச்சியாக கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டு வந்த தாதாக்கள் 19 கேடிகள் மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . கடந்த 2.9.2023 அன்று செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் நடத்திய வாகன சோதனையில் ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளியில் இருந்து tn06 z1966 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவில் இருந்து 50 கிலோ கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த கேடிகள் 1. நரசிம்மன் தகப்பனார் பெயர் வேணுகோபால் 2. சேதுராமன் தகப்பனார் பெயர் முரளி 3 அ னகா பள்ளி சிட்டிபாபு தகப்பனார் பெயர் பெட்டா பால ண்ணா 4. வெங்கட் ராவ் குமுடா தகப்பனார் பெயர் சான செய்யக்குமு டா 5. உட்டு பூபதி ராவ் தகப்பனார் பெயர் உ ட்டி பி ண்ணெய்யா 6. மஸ்தா ன் என்கிற பழனி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். கடந்த 11.10.2023 அன்று பூந்தமல்லி போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திர மாநிலம் காலாஸ் த்திலிருந்து tn12aq7518 என்ற பதிவு என் கொண்ட து tn13y1303 என்ற இருசக்கர வாகனங்களில் இருந்து 3815 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள் பூந்தமல்லி பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த கேடிகள் 1. ஆகாஷ் 2. மாறன் 3. சீனு ராஜ் 4.ஆனந் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் 625 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன 644 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் . 4716 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன .அபராதமாக ரூபாய் 26 லட் த்து முப்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விற்பனை செய்து வந்த 195 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன . தொடர்ச்சியாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்..