கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வால்பாறை காந்தி சிலை அருகே TN.66 Y 9977 xuv 500 எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அன்பரசு என்பவரின் மகன் சபரீஸ் வயது 35, ஆறுமுகம் என்பவரின் மகன் பிரதீப் குமார் வயது 21 மற்றும் வால்பாறை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ரவீந்திரன் ஆகிய மூவரும் மது போதையுடன் காரிலிருந்து இறங்கி உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மேற்க் கண்ட காரை ஓட்டி வந்த ஓட்டுனர் சபரீஸ் என்பவருக்கு மது போதை சான்று வழங்கி வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மூவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார் .மேலும் வால்பாறை பகுதியில் வந்து செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மது அருந்திவிட்டு யாரும் இயக்காமல் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்