கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் புது காலனியை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி கவிதா ( வயது 27) நேற்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகரன் ( வயது 29) என்பவர் அவரது வீட்டினுள் புகுந்து அவரது வாயை பொத்தி, மிரட்டி, மானபங்கம் செய்ய முயற்சித்தாராம்.அவரை கவிதா கையும் களவுமாக பிடித்து கோட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.