கனமாச்சத்திரத்தில் பெண் மானபங்கம்… நியாயம் கேட்டு 60 நாட்களாக காவல் நிலையம் முன்பு கண்ணீருடன் போராடும் அக்கா ,தங்கை.!!

திருவள்ளூர்: கனகம்மா சத்திரம் துணிக்கடை நடத்தி வரும் பெண்ணை மான பங்கம் செய்து அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா குழந்தை பன்னிரண்டு வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீ து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக காவல் நிலையம் முன்பு கண்ணீருடன் முறையிட்ட பெண். நியாயம் கிடைக்காமல் 60 நாட்களாக போராடும் பெண்கள்..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர்கள் சாந்தினி மற்றும் மதுமிதா இவர்கள் இருவரும் அக்கா தங்கைகள் ஆவார்கள் . இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் பகுதியில் இருந்து திருத்தணிக்கு செல்லும் பொழுது இவர்களை வழிமடக்கி அருண் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் சாந்திணியிடம் தவறான முறையில் பெண் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் பலமான முறையில் சாந்தினியை பலமாக  தாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த பெண்ணிடம் இருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அருண் மற்றும் சக்திவேல் அந்த பகுதியில் இருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்  அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சாந்தினி கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் மற்றும் சக்திவேலை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்திலும் இதுகுறித்து சாந்தினி மதுமிதா முறையிட்டுள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கனகம்மாசத்திரம் போலீசார் மெத்தன போக்குடன் இருந்து கொண்டதால் மறுபடியும் சக்திவேல் இந்த இளைஞர் சாந்தினி அக்கா பெண் குழந்தை ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தை 12 வயது . இந்த பெண் குழந்தையை தனியார் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று சக்திவேல் மறைவான இடத்தில் வைத்து பெண் குழந்தையிடம் தவறான முறையில் செக்ஸ்  டார்ச்சர் கொடுத்ததாக கூறி இது சம்பந்தமாக திருத்தணி டி.எஸ்.பி அலுவலகத்திலும் மற்றும் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் திருவள்ளூர் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து உரிய விசாரணை செய்த பின்பும் குற்றவாளி என்று நாங்கள் கூறிய சக்திவேலை 60 நாட்களாக கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் திருத்தணி போலீசார்.

மேலும் அருண் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர்   எங்கள் அக்கா தங்கை இருவர் மீதும் கொலவெறி தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றனர்.

எங்கள் உயிருக்கு உடமைக்கு மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு அருண் மற்றும் சக்திவேல் தான் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் காவல்துறையும் முழு பொறுப்பு என்று காவல் நிலையம் முன்பு கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட சாந்தினி பேட்டி அளித்துள்ளார்.

பாண்டிச்சேரி சம்பவம் போல் திருத்தணியில் 12 வயது குழந்தைக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை இந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது..