கோவை பெண் டாக்டர், கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகரை சேர்ந்தவர் கண்ணன்.பாரதியார் பல்கலைக்கழகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கீர்த்தனா ( வயது 27) பல் டாக்டர் . இவரும் வெங்கடேஷ் பிரவீன் என்பவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்தனர். இதை வெங்கடேஷ் பிரவீன் வீட்டில் விரும்பவில்லை .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியே சென்ற கீர்த்தனா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோல கோவை அருகே உள்ள ராக்கிபாளையம், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் தேவராஜ் .இவரது மகள் ஆர்த்தி (வயது 23) துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .காம் ( சி ஏ ) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தந்தை தேவராஜ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.