கோவை வியாபாரி வீட்டில் 177 பவுன் தங்க நகை, ரூ 9.75 லட்சம் பணம் கொள்ளை – போலீஸ் வலைவீச்சு .!!

கோவை பீளமேட்டில் உள்ள செங்காளியப்பா நகர், 3 – வது மெயின் ரோட்டைசேர்ந்தவர் மனோகரன் (வயது 64)) இவர்கோவை மில் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மனோகரனின் மனைவிஉடல் நலக்குறைவுகாரணமாக திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 23-2 – 2024 அன்று மனோகரன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் மனோகரன் மனைவியின் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு அங்கேயேதங்கி இருந்தார். நேற்று காலையில் கோவையில் உள்ள அவரது பக்கத்து வீட்டுக்காரர் செல்வராஜ் மனோகரனுக்கு போன் செய்து அவரது வீட்டின் முன் கதவுபூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் திருச்சியில் இருந்து நேற்று மாலைகோவைக்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த177 பவுன் தங்க நகைகள், ரூ 9 லட்சத்து 75 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் ஆகியோர சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.