கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு அம்மன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 40) மணியக்காரன் பாளையம் (ரமேஷ் 57) வரதராஜபுரம் குமார் ( வயது 49) கன்னிவாடி கார்த்திக் (வயது 37) காமாட்சிபுரம் அகஸ்டின் ஞானசேகர் (வயது 52) ஆகியோர் கைது செய்யப்பட்டது. சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 4, 140 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.