ஆவடிபறக்கும் படை டெபுடி தாசில்தார் தேன்மொழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை காவலர் ரமேஷ் குமார் ஆயுத படை பெண் காவலர் ஜெயலஷ்மி ஆகியோர்கள் ஆவடி கோவில் பதாகை அஜய் விளையாட்டு மைதானம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற tn 01n 9825 என்ற பதிவு என் கொண்ட மாநகரப் பேருந்து தடம் எண் 61r நிறுத்தி சோதனை செய்த போது பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த 2 மர்ம ஆசாமிகள் வைத்திருந்த கைப்பையை சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது அதில் நைட் ரோ விட் என்ற 50 பாக்கெட் கொண்ட 15 ஆயிரம் போதை மாத்திரைகள் வானத்தில் பறக்க வைக்கும் சக்தி கொண்டது என தெரிய வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தேன்மொழி ஆவடி டேங்க் பேக்டரி போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் 1. தினேஷ்(24) தகப்பனார் பெயர் குணா 2 வது பிளாக் முகப்பேர் மேற்கு சென்னை 2.கலையரசு(17) தகப்பனார் பெயர் செந்தில் முருகன் 1 வது பிளாக் முகப்பேர் மேற்கு சென்னை என தெரிய வந்தது . இவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை அதிக விலைக்கு விற்க ஹைதராபாத்தில் இருந்து வாங்கி வந்ததாக வாக்குமூலத்தில் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..