சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.முன்னதாக, அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார்.
சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
- சென்னை தெற்கு – ஜெயவர்தன்
- காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
- அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
- கிருஷ்ணகிரி – வி.ஜெயப்பிரகாஷ்
- ஆரணி – ஜி.வி.கஜேந்திரன்
- சேலம் – விக்னேஷ்
- தேனி – நாராயணசாமி
- விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
- நாமக்கல் – எஸ்.தனிமொழி
- ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
- கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
- சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
- நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
- மதுரை: பி.சரவணன்
- ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்