கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவரின் கணவர் கோகுலக்கண்ணன் வயது 40. இவர் ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி குடியிருந்து வரும் வால்பாறையிலுள்ள கக்கன் காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து போயிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு டியூசன் படிக்க வரும் ஒன்பது மற்றும் பத்தாம் ஆம் வகுப்பு மாணவிகள் ஒரு சிலரிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது . இச்சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி மகளிர் காவல் ஆய்வாளர் மல்லிகா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் துறையினர் கோகுலக்கண்ணனை கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்..