சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் அப்பாவி பொதுமக்களிடம் தனது டுபாக்கூர் 21 கிளைகளிலும் 2021 ஜனவரி முதல் 2022 மே மாதம் வரை டெபாசிட் வசூல் செய்து மோசடி செய்தனர். இதில் காவல் துறை உயர் அதிகாரிகளும் போலீசாரு ம் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . வழக்கில் தொடர்புடைய கேடிகள் தொடர்பு வைத்துள்ள 170 வங்கிகளில் 102 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 வாடிக்கையாளர்கள் 2438 கோடி ரூபாயை ஏமாந்து உள்ளதாகவும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி பிராடு ராஜசேகர் அவனது ஆசை மனைவி உஷா ஆகியோர் துபாய் நாட்டிற்கு தப்பி சென்றனர். அவர்களுக்கு லுக் அவுட் சர்குலர் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அபுதாபி இன்டர் போலீஸ் உதவியுடன் ராஜசேகரை கைது செய்தனர். அவனை இந்தியாவிற்கு கொண்டு வர துபாய் அரசின் பரிசீலனையில் உள்ளது . மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ ஏகண்டாக செயல்பட்டதற்காக வழக்கை முடித்து தருகிறேன். பல கோடி பெற்றதற்காக ஜாமினில் வெளியே வந்துள்ளான். ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டது. தற்போது ரூசோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலை மறைவாக உள்ளான். தற்போது ரூசோவை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..