கோவை அருகே உள்ள வடவள்ளி, தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகள் பிரீத்தி ( வயது 34) கடந்த 21-11-23 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு நிறுவனத்தில் (கூகுள் ரெவீயூ) முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரீத்தி பல்வேறு தவணைகளில் ரூ 4 லட்சத்து 63 ஆயிரம் அனுப்பி வைத்தார். முதல் 2 மாதங்கள் மட்டும் லாபத் தொகை வந்தது .பிறகு எதுவும் வரவில்லை. அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரீத்தி கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தி வருகிறார்கள்.