உதகை : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டு, கேரம்போர்டு, தாயம் போட்டியில் முதியோர்களுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதனைத் தொடர்ந்து முதியோர்களின் கலை நிகழ்சிகளை பார்வையிட்டு கட்டாயமாக நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ஸ்வீப் நோடல் அலுவலர் ஜெயராமன், சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, உதகை வட்டாட்சியர் சரவணகுமார்,இல்லத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்..
உதகை அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு.!!
