கோவை கணபதி ஆவாரம்பாளையம் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கருணாம்மாள் (வயது 88 )நேற்று இவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இவர் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் அப்போது அந்த 2 பேரும் பின் தொடர்ந்து சென்று அவரிடம் இருந்த ஒரு பவுன் கம்மல், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கருணாம்பாள் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வருகிறார்கள்.
குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு.!!
