இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் நேபாளம் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களையும் அவர்களையும் உதவி செய்த நபரையும் கைது செய்துள்ளனர். நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவியதும் இங்கு நாசவேலைகளில் ஈடுபட வந்ததும் தெரியவந்துள்ளது. கைதான பாகிஸ்தானியர் இருவரின் அடையாளமும் வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது அல்தாப் பாத், சையத் கஜ்ன்பர் என்ற இரண்டு பாகிஸ்தானியர்கள் அவர்களுக்கு உதவி செய்தது ஸ்ரீநகரை சேர்ந்த நாசிர் அலி என்பது தெரியவந்ததுள்ளது.பயங்கரவாத தடுப்பு படையினர் கூறுகையில், முஹம்மது அல்தாப் பாத் ஐஎஸ்ஐ உதவியுடன் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் பயிற்சி எடுத்துள்ளார். சையத் மற்றும் நாசிர் அலியுடன் சேர்ந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட வந்தது தெரியவந்தது.
பாகிஸ்தானியர்கள் சிலர் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வதை உளவுத்துறை மோப்பம் பிடித்தது. அந்த நபர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் பயிற்சி பெற்றது அவர்கள் இந்தியாவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டத்தையும் உளவுத்துறை கண்டறிந்தது. இதனையடுத்து எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிக்கப்பட்டது. அப்போது இந்தோ-நேபாளம் எல்லையில் இவர்களை கைது செய்துள்ளது.