கோவை : சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்கள் ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2024 ஆம் தேதி மார்ச் 31 – ந் தேதி வரை சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பயண சீட்டு இல்லாமல் பயணித்ததாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 907 பேர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 846 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 451 பேர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 506 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 20 23- 24 நிதியாண்டில் ரூ.19 கோடியே 3 லட்சத்து 46 ஆயிரத்து 710 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.