ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… டிக்கெட் ரீஃபண்ட் பணம் உடனடியாக கிடைக்க சூப்பர் ஆப் அறிமுகம்..!

பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து புதிய திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதிய திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே கொண்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் ஆப்’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்கிறது. இது ரயில்வே துறை தொடர்பான ஒவ்வொரு பணியையும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவொரு 100 நாள் திட்டமாக செயல்படுத்தப்படுவதாகவும், இதன் கீழ் பயணிகள் பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைஅய் நிலையில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால், பணத்தைத் திரும்பப் பெற மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 24 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட் ரீஃபண்ட் பணத்தை வழங்கும் வகையில் இந்த ஆப் செயல்படும். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு முதல் ரயில் கண்காணிப்பு வரை பல வசதிகளை ரயில் பயணிகள் பெறமுடியும். இந்த ஆப் பயன்பாட்டுக்கு வந்தவுடன் ரயில் பயணிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.