கோவை மாவட்டம் காரமடை மங்கலக்கரை புதூர், எம் ஜி ஆர் காலனியை சேர்ந்தவர் அம்சராஜ் ( வயது 30) அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் ( வயது 37) இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக நேற்று வாய் தகராறு ஏற்பட்டது . அப்போது ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக வெடித்தது. இதில் அம்சராஜ் ஆனந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அம்சராஜ் காரமடை போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் ஆனந்தன் ( வயது37) கார்த்தி (வயது 42) செல்வராஜ் ( வயது 60) 16 வயது இளைஞர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஆனஸ்ட் ராஜ் (வயது 30) விக்னேஷ் ( வயது 23) விஷ்ணு ( வயது 24) ஹரிஹரசுதன் ( வயது 25 ) ஐயப்பன் ( வயது 38) சிவராஜ் ( வயது 60) சிவகாமி (வயது 55)) வடிவு ( வயது 50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..