கோவை அருகே உள்ள கோவைபுதூர் தொட்டராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா கிருஷ்ணன் ( வயது 32) இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை கவனிக்க திருச்சி ,உறையூரை சேர்ந்த பிரதி மீனா (வயது 21) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.இந்த நிலையில், 30-6-22 அன்று அவர்கள் வீட்டில் இருந்த 3 பவுன் தங்கதாலி மாங்கல்யம், வைரக் கம்மல், சூட்கேஸ் ஆகியவற்றை காணவில்லை.இந்த நிலையில் வேலைக்காரி பிரதிமீனா திடீரென்று மாயமானார்.இது குறித்து சந்தியா கிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.அதில் தங்கள் வீட்டில் 3 – 5 – 22 முதல் வேலை பார்த்து வந்த பிரதிமீனா இவைகளை திருடி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். போலீசார் பிரதிமீனா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.