கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கோவையில் கைது
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் பழைய புதூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன்- யை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தும் , இதே போன்று சாமநாயக்கன் பாளையம் அருகே சென்று சோதனை மேற்கண்ட போது கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் -யை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி இரண்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.