திருநங்கை என்பதால் கல்லூரியில் சேர இடம் கிடைக்காமல் தவித்த மாணவி… உதவி கரம் நீட்டிய கலெக்டர், போலீஸ் கமிஷனர்.!!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா ( வயது 17 )இவர் கோவை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தும் அவருக்கு பி எஸ் சி உளவியல் படிப்பு படிக்க ஆசை. இதற்காக பல கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் கேட்டுள்ளார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் |கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர், சுகாசினி ஆகியோர் அஜிதா படிப்பதற்கு உதவிக்கரம் நீட்டினார்கள். கோவையில் தனியார் கல்லூரியில் அவர் விரும்பிய இளநிலை படிப்பு படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தனர். அத்துடன் மாநகர போலீஸ் சார்பில் மாணவி அஜிதா படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் மாணவி அஜிதா மகிழ்ச்சி அடைந்தார் .

இது குறித்து அவர் கூறியதாவது. -நான் வடகோவையில் உள்ள மாநகராட்சி பகுதியில் பிளஸ் 2 படித்தேன் .எனது வீடு சிங்காநல்லூரில் உள்ளது .பள்ளிக்கு தினமும் பஸ்சில் தான் சென்று வந்தேன். பிளஸ் 2 தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதும் கல்லூரியில் சேர விரும்பினேன். ஆனால் நான் சென்று கேட்ட கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் வருத்தத்துடன் இருந்தேன். அடுத்து என்ன செய்வேன்? என்கிற தவிப்புடன் இருந்தேன் .ஆனால் எனது நிலையை எப்படியோ அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சுகாசினி ஆகியோ எனக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். இதில் எனது படிப்பு செலவு முழுவதையும் போலீசார் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது படிப்புக்கு அவர்களுக்கு காவல் தெய்வங்களாக ஆகிவிட்டனர். இதைநான் ஒருபோதும் மறக்க மாட்டேன் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நான் படித்து முடித்ததும் பி.எஸ்.சி தேர்வு எழுதி அரசு பணியில் சேர விரும்புகிறேன். கல்வியில் வெற்றி பெற்ற திருநங்கைகளை முன்னோடியாக கொண்டு சமூகத்துக்கான பணிகளை மேற்கொள்வேன்..இவ்வாறு அவர் கூறினார்.