கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பதிவு – வெப்பம் தணிந்து சில்லென்று மாறியது வானிலை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 8 செ.மீ., எடப்பள்ளியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

குன்னூர் புறநகர் பகுதியில் 6.4 செ.மீ., கின்னகொரை, பந்தலூர், தேவாலா, கோத்தகிரியில் தலா 6.4 செ.மீ மழை பதிவானது. மேட்டுப்பாளைம் – குன்னூர் பாதையில் அடர்லி என்ற இடத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.