கோவை ஆர். எஸ். புரம், அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41 ) இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் . இவரது மனைவி காவியா, பி. இ. பட்டதாரி. இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேர் கூறினார்களாம். தை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 29 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை எடுத்துக் கொடுக்கவில்லை. இது குறித்து பிரபு வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வடவள்ளி நவாவூர் பிரிவு,வெள்ளியங்கிரி நகரைசேர்ந்த தங்கவேல் ( வயது 79 ) என்பவரை கைது செய்தனர். மோசடி கும்பலை சேர்ந்த ரவி பாரதி, சுந்தரகாந்த், உமா ஆகியோரை தேடி வருகிறார்கள்..