கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு தலைமையில் போலீசார் நேற்று சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்ப தேவர் மகன் செல்வம் (வயது 44) பாண்டியன் மகன் இளையராஜா (வயது 47) மற்றும் முருகன் மகன் பிரவீன் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மேற்படி நபர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் இங்கு கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது . 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..