கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – கட்டிட உரிமையாளர் மீது வழக்கு..!

கோவை பீளமேடு வீரியம்பாளையம் ரோட்டில் உள்ள நேரு நகரில் (மேற்கு) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் பொன்ராஜ். இவரது மனைவி சிந்து ( வயது 32) வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து இவரது கணவர் விஷம் குடித்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவரது மனைவி சிந்து உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் இவருக்கு போன் செய்தார் . வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ 1 லட்சத்து 25 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள், வீட்டு பத்திரங்கள், மகனின் பிறந்த சான்றிதழ், லைசென்ஸ், வாடகை அக்ரிமெண்ட் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது .இதுகுறித்து சிந்து பீளமேடு போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரங்கராஜன், கவிதா உட்பட சிலர் மீது திருட்டு உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..