போலியான ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்த போரூர் கேடி கைது..!

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் மத்திய குற்ற பிரிவில் நில பிரச்சினை தீர்வு பிரிவில் சென்னை கேகே நகர் குணசேகரன் கொடுத்த புகார் மனுவில் கொளுத்து வாஞ்சேரி ஈவிபி பிரபு அவென்யுவில் 4610 சதுர அடி வீட்டுமனை மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் ஆகும் . கடந்த 2023 ஆம் ஆண்டு தேவேந்திரன் மனைவி சுகுணா என்பவரின் பொது அதிகார முகவரான சங்கரன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்துள்ளதாகவும் தன்னுடைய இடத்திற்கு வில்லங்கம் போட்டு பார்த்த போது தன்னுடைய சென்னை விலாசம் குறிப்பிட்டு போலியான ஆதார் கார்டுகளை உருவாக்கி ஆள் மாறாட்ட நபர் மூலமாக தன்னுடைய வீட்டுமனையை 4160 சதுர அடி கேடிகள் சூழ்ச்சி செய்து அய்யனாரப்பன் மற்றும் விஜயலட்சுமிக்கு என்பவர்களுக்கு போலியான பொது அதிகாரம் அளித்தும் பின்னர் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை ரத்து செய்து போலியான ஆவணங்களை உருவாக்கி மீண்டும் கேடி பத்மநாபன் என்பவருக்கு பொது அதிகாரம் அளித்து தன்னுடைய இடத்திற்கு வில்லங்கம் ஏற்படுத்தி அபேஸ் செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் தங்களுக்கு சொந்தமில்லாத இடத்தை போலி ஆவணங்களை உருவாக்கி அதை உண்மையான ஆவணங்கள் போல பயன்படுத்தி ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்புடைய வீட்டு மனை அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பி. பெருமாள் மேற்பார்வையில் நில பிரச்சினை தீர்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மாறுவேடத்தில் போலீஸ் படையினர் தீவிரமாக துப்பு துலக்கி இன்டர்நேஷனல் கேடி ராஜு என்கிற ஆள் மாறாட்ட குணசேகரனை வயது 63 தகப்பனார் பெயர் நடேசன் போரூர் சென்னை என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..