கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.