கோவை தெற்கு உக்கடம், ரோஸ் கார்டனை சேர்ந்தவர்இர்ஷாத் . இவரது மனைவி ஷிபா (வயது 28) இர்ஷாத் சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். கோவையில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியிடம் 30 பவுன் நகை பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறினார். அதற்கு ஷிபா மறுத்தார் . இதனால் ஆத்திரம் அடைந்த இர்ஷாத் அவரை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து ஷிபாகடை வீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் . போலீசார் கணவர் இர்ஷாத் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை ,உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.