கோவை: நேரு ஸ்டேடியத்தில் கோவை மாவட்ட கால்பந்து சங்கம் செயல்பட்டு வந்தது. இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. பிறகும் கால் பந்து சங்கத்தினர் அந்த சாவியை மண்டல முதுநிலை மேலாளர் வசம் கொடுக்கவில்லை. இதனால் இளைஞர் நல அதிகாரி அருணா அந்த சங்க அலுவலகத்தை மற்றொரு பூட்டை வைத்து பூட்டினார். இந்த நிலையில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், சந்திரன், ரந்தீர் ,செந்தில் பிரபு, ஆகியோர் சேர்ந்து அந்த பூட்டை உடைத்து விட்டு அவர்கள் வைத்திருந்த மற்றொரு பூட்டை பூட்டி சாவி எடுத்துக் கொண்டனர். இது குறித்து மண்டல முதுநிலை மேலாளரும், இளைஞர் நல அதிகாரியுமான அருணா ரேஸ்கோர்ஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் விசாரணை நடத்தி கால்பந்து சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், சந்திரன், ரந்தீர் செந்தில் பிரபு ஆகியோர் மீது அரசு ஊழியர்களை பணி செய்வதாக தடுத்தல் மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்.