திருச்சியில் துரை வைகோ வெற்றி.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக போட்டியிட்டது. மதிமுக சார்பில் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டார். அதிமுக சார்பில் கருப்பையாவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதனும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகிய மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும்  பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் வாக்குகள் எண்ண பட்டன அப்போது திருச்சி தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை பார்வையாளரான தினேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் இதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட்டன காலை 10:30 மணிக்கு மேல் சுற்றுவாரியாக ஓட்டுகள் விவரம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது இறுதியாக நேற்று மாலை 6:30 மணிக்கு மேல் அதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 5 லட்சத்து 42 ஆயிரத்து 213 வாக்குகள் பெற்றார் இவருக்கு அடுத்தபடியாக அதிமுகவை சேர்ந்த கருப்பையா இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 119 வாக்குகள் பெற்றார் இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை சுமார் 3 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதைத்தொடர்ந்து மதிமுக வேட்பாளர் துரைவைகோவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார் அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.