தேர் நிலை திடலில் மட்டன், சிக்கன் கழிவுகளை கொட்டியவர் கைது..!

கோவை ராஜவீதியில் உள்ள தேர் நிலைத்திடல் அருகே மட்டன் – சிக்கன் கழிவுகளை யாரோ கொட்டி வந்தனர்..இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது .இதையடுத்து போலீசார் மாநகராட்சி தொழிலாளர்கள் உதவியுடன் அந்த கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் அந்த இடத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்தனர். அதில் ஒரு நபர் ஸ்கூட்டரில் ஏற்றி வந்து இந்த கழிவுகளை கொட்டுவது பதிவாகி இருந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் போத்தனூர் முகமத் அயாஸ் (வயது 41) என்பது தெரிய வந்தது. .இவர் காந்தி பார்க்கில் மட்டன் கடை நடத்தி வரும் முகமது வாய்ஸ் என்பவரது சகோதரர் என்பது தெரிய வந்தது. இவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.