மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளசந்தையில் விற்பனை – 4 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம்,நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சிப்ஸ் கடையின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்துகள்ள சந்தையில் விற்பனை செய்வதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது 56 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ 6, 900 பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டாஸ்மாக் பார் சப்ளையர் காரைக்குடி சிவா ( 27 ) ராமநாதபுரம் திருவாடனை ,முத்தன் கோட்டை மணிகண்டன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.இதே போல சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்விற்பனை செய்வதாகசிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 203 மது பாட்டில்களும்,மது விற்ற 10, 710 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சேர்ந்த நடேசன் ( 45 ) காரைக்குடி .சீனிவாசா நகரை சேர்ந்த கார்த்திக் ( 23 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .ராமசாமி ,பத்மநாபன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.