தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. குழந்தை தொழிலாளர் இல்லாதா மாநிலமாக மாற்ற வேண்டும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்றும்12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டோம். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தங்களால் இயன்றவரை பாடுபடுவோம் என தெரிவித்தார். திருச்சி KK.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் ஒப்படைத்தார்கள். திருச்சியில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த மனுக்கள் மீது தீர்வு கான சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டி அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி நகரில் இதுவரை 54 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
திருச்சி மாநகரில் நடந்த வழிப்பறி கொலை சம்பவத்தில் 22 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் பூட்டை உடைத்த 19 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுவரை திருச்சி நகரில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களில் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகரை பொறுத்தவரை 860 கண்காணிப்பு கேமராக்கள் சாலைகள் மட்டும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களும், வியாபாரிகளும் அந்தந்த பகுதிகளில் போலீசாருடன் ஒத்துழைப்பு நல்கி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என மாநகர காவல் ஆணையர் காமினி கூறினார்
பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு கொலை மற்றும் வழிப்பறி அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதை கண்டறிந்து சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார் திருச்சி மாநகரங்களில் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை மாநகர ஆணையரின் பேச்சு கலக்கமடைய செய்திருக்கிறது..