கோவையில் முப்பெரும் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு : வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு – 3200 போலீசார் பாதுகாப்பு..!

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 – 20 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது .12 30மணிக்கு லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்றடைந்தார்..விமான நிலையத்திலிருந்து லீ மெரிடியன் ஒட்டல் வரை ரோட்டில் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5-15 மணிக்கு கொடிசியா மைதானம் சென்றார்,முப்பெரும் விழாவில் பங்கேற்றார். இரவு 7மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுவிமான நிலையம் சென்றார். 7 – 30மணிக்கு தனி விமான மூலம் சென்னை புறப்பட்டார.முதல் அமைச்சர் வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் . இது தவிர மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ,டி ஐ ஜிக்கள் சரவண சுந்தர், (கோவை) உமா (சேலம்) மற்றும்12 போலீஸ் சூப்பிரண்டுகள் உட்பட 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலமைச்சர வருகையை ஒட்டி கோவையில் நேற்று இரவு விடிய, விடிய தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. முப்பெரும் விழா நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முப்பெரும் விழாவையொட்டி கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.