காஞ்சிபுரம் பெண் காவலருக்கு கத்திக்குத்து – கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு.!!

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி .இவரது கணவர் பெயர் மேகவர்ணன் கம்ப்யூட்டருக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நகரில் சிறு காவேரி பக்கத்தில் வசித்து வந்தனர். கணவன் மேகவர்ணன் மனைவி டில்லி ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்நிலையில் டி ல்லி ராணி நேற்று மதியம் காவல் நிலையத்திற்கு சென்று விட்டு சங்கர மடம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது மேக வர்ணன் ஆத்திரத்தோடு வந்து டில்லி ராணியை அவரது இடது கையில் கத்தியை எடுத்து சதக் சதக் என்று குத்தி உள்ளார். ரத்த வெள்ளத்தில் அலறிய டில்லி ராணி என் புருஷன் கத்தியால் குத்தி புட்டு தப்பி ஓடுறான். அவனை புடிங்க புடிங்க என அலறிக் கொண்டே கீழே விழுந்தார் . அவரை அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஆட்டோவை அழைத்து காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்க்காக சேர்த்தன.ர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர பரிந்துரை செய்தனர் . டில்லி ராணியை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சண்முகம் பார்த்தபின் குற்றவாளியை விரைந்து பிடிக்க மேல் நடவடிக்கை எடுத்திடவும் ஆணை பிறப்பித்தார்..